"ஹலோ தலைவரே, தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்குமேல் இருக்கும் நிலையிலும், தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாவே இருக்குதே.''”

“"ஆமாம்பா, எந்தக் கட்சி தனக்கு அடைக்கலம் கொடுக்கும்னு, அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த அர்ஜுன் ஆதவ் கூட, நடிகர் விஜய்யிடம் ஒருவழியாய் செட்டில் ஆகிவிட்டாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஆதவ் அர்ஜுனைப் பொறுத்த வரை, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக, ஒரு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று துடியாய்த் துடித்தார். அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தபோதே தி.மு.க. கூட்டணியை உடைக்க அவர் தீவிரமாகத் திட் டம் போட்டார். இதற் காக உதயநிதியைக்கூட சீண்டினார். ஆனாலும், அவரது முயற்சி பலிக்க வில்லை. மாறாக, அவர் மீதுதான் சிறுத் தைகள் கட்சி நட வடிக்கை எடுத்தது. இதற்கிடையே அவரது மாமனாரான லாட்டரி மார்ட்டின், அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க எடப்பாடிக்கு தூது விட்டார். ஆதவ் அர்ஜுனை கட்சியில் சேர்த்துக்கொண்டால் 300 கோடி ரூபாய்வரை தருகிறேன் என்றும் அவர் எடப்பாடிக்கு ஆசை காட்டினார். இருந்தும், ஆதவ் அர்ஜுன் ஒரு அதிகாரப் பசிகொண்ட ஆண் சசிகலா என்றபடி, அவரைக் கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டாராம் எடப்பாடி. அதோடு, நீங்களே மைனாரிட்டி சமூகங்களை வைத்து ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குங்களேன் என்றும் அவருக்கு ஆலோசனை சொல்லி, அங்கிருந்து அவரை நகர்த்தினா ராம். இந்த நிலையில்தான் ஒரு பத்திரிகை மூலம் நடிகர் விஜய்யிடம் பேசி, அவரிடம் ஆதவ் அர்ஜுன் சரண டைந்திருக்கிறார் என்கிறார் கள். விரைவில் அவர் கட்சியில் இணைந்ததற்கான அறிவிப்பு வரலாம் என்றும் சொல்கிறார்கள்.''”

"சரிப்பா, தங்கள் கட்சி மா.செ.க்களை நடிகர் விஜய் கடுமையாக எச்சரித்திருக் கிறாரே?''”

"தனது த.வெ.க. கட்சி யின் உள்கட்டமைப்பை 120 மாவட்டங்களாக நடிகர் விஜய் பிரித்திருக்கிறார். இந்த 120 மாவட்டங்களுக்கும் மா.செ.க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான ஆலோசனைகளையும் அவர் ஏற்கனவே நடத்தினார். இந்த நிலையில், கடந்த வாரம் 19 மாவட்டங்களுக்கு மா.செ.க் களை அறிவித்த விஜய், இரண்டாம் கட்டமாக கடந்த 29ஆம் தேதி, மேலும் 19 மா.செ.க்களை நியமித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து தனது பனையூர் அலுவலகத்தில் புதிய மா.செ.க்களிடம் பேசிய விஜய், "உங்களுக்கு கீழே இயங்கும் மாவட்ட அமைப்பு நிர்வாகிகளைத் தேர்வு செய்யும்போது எவ்வித முரண்பாடுகளுக்கும் இடம் தரக்கூடாது. எந்த புகாரும் வராதபடி உங்கள் தேர்வு இருக்க வேண்டும். தகுதியுள்ள, நன்றாக உழைக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே நீங்கள் பதவிகளைத் தரவேண்டும். உங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் வந்தால், நான் சும்மா இருக்கமாட்டேன். என்னுடய ஆக்ஷன் கடுமையாகவே இருக்கும்'’என்று கறார் குரலில் எச்சரித்திருக்கிறார். இதற்கு காரணம், கட்சிப் பதவிகளுக்கு விலை பேசப்படுகின்றன என்கிற புகார்கள் பரவலாக வந்ததுதான் என்கிறார்கள்.''”

"அ.தி.மு.க.வில் புதிய நியமனங்களின் மூலம் மாஜி மந்திரி வேலுமணிக்கு எடப்பாடி செக் வைத்திருக்கிறாரேப்பா?''”

rr

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் புதிய அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச் சர்கள் கோவை வேலுச்சாமி, முல்லைவேந்தன், டாக்டர் மைத்ரேயன், சின்னச்சாமி ஆகிய 4 பேரை நியமித்திருக்கிறார் எடப்பாடி. இவற்றில் கோவை வேலுச்சாமி, சின்னச்சாமி ஆகியோரின் நியமனம், எஸ்.பி. வேலுமணிக்கு செக் வைக்கும் வகையில் செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. வின் தலைமைக் கழக நிர்வாகிகள். இது குறித்து அவர்களிடமே விசாரித்தபோது, ‘"பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருந்து வருகிறார் வேலுமணி. அக்கட்சியின் ஆதரவோடு எடப்பாடிக்கு அவ்வப்போது குடைச்சலும் கொடுத்துவருகிறார். இதனால், டெல்லியின் உதவியோடு அ.தி.மு.க.வின் தலைமையை அவர் கைப்பற்றிவிடுவாரோ என்கிற பயமும் எடப்பாடிக்கு இருக்கிறது. மேலும், கோவை என்றால் அ.தி.மு.க.வில் தன்னைத் தவிர யாருமில்லை என்கிற தோற் றத்தையும் வேலுமணி உருவாக்கி வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட காரணங்களால், கோவையில் வேலுமணிக்கு எதிர் சக்திகளை உருவாக்கும் திட்டத்தோடுதான், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மேயருமான வேலுச்சாமியையும், சிங்கநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னச்சாமியையும் அமைப்புச் செயலாளர்களாக எடப்பாடி அமர்த்தியிருக்கிறார்'’ என்கிறார்கள் அழுத்தமாக.''”

"சாம்சங் நிறுவன ஊழி யர்களின் கோரிக்கைகள் வெற்றிபெற்றிருக்கிறதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கிவரும் சாம்சங் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கேட்டும் பல்வேறு உரிமைகளை வலியுறுத்தியும், கடந்த ஆண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். தி.மு.க. அரசின் தொழிலாளர் நலத்துறையும் இதைக் கண்டுகொள்ளாத சூழலில், வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் குதித்தனர். போராட்டம் வீரியமானது. இதனையடுத்து, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, கணேசன் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்பதாக அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும் உடனடியாக அறிவிப்பு எதுவும் வெளி வராததால், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் இதுகுறித்து அதிருப்திக் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி, சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை அங்கீகரித் திருக்கிறது அரசின் தொழிலாளர் நலத்துறை. இது இப்போது அனைத்துத் தொழிற்சங்கத்தினரையும் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.''”

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆபரணங்கள் தமிழகத்திற்கு வருகிறதே?''”

rr

Advertisment

"சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெ.விடமிருந்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறது. குறிப்பாக 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு, பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது அ.தி.மு.க. தரப்பிலும், தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கம், வைரம், வெள்ளி நகைகள் மற்றும் நிலப்பத்திரங்களை வரும் பிப்ரவரி 14, 15 தேதிகளில் ஒப்படைத்தாக வேண்டும். மேலும், அன்றைய தினம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெட்டிகளுடன் வர வேண்டும். உரிய வாகன பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்யவேண்டும். பொருட்கள் எடுத்துச் செல்லும்போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்கவேண்டும். ஒட்டு மொத்த நடைமுறையும் வீடியோவில் பதிவு செய்யவேண்டும் என்றெல்லாம் இதற்காக விரிவாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஜெ.வின் இந்த சொத்துக்களை தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது? என்கிற கேள்வி இப்போதே எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.''”

"அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் கலைப்பணிகளை சிறப்பித்து நடந்த விழாவில், பெரியாரின் மீதான விமர்சனத்துக்கு தொல்.திருமாவளவன் சிறப்பா பதிலளிச்சிருக்காரே''”

rr

"ஆமாங்க தலைவரே, விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, ‘'தமிழ் ஈழ தேசியத் தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அழைப்பையேற்று 2002-ல் ஈழத்துக்குச் சென்றிருந்தோம். அந்தக் குழுவில் 5 பேர் இடம்பெற்றிருந்தோம். அப்போதுதான் அண்ணன் மருதுவோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.. வல்வெட்டிக்குப் போய் பிரபாகரனின் சிதைந்த இல்லத்தைப் பார்த்தோம். அண்ணனின் தளபதிகளோடு கலந்துரையாடினோம். வன்னிக்குச் சென்றோம். எங்களை வரவேற்க அண்ணன் பிரபாகரன் தனது ராணுவ உடையோடு காத்திருந்தார். எங்களை ஆரத்தழுவி வரவேற்றார். எங்களோடு சேர்ந்து மதிய உணவு எடுத்துக்கொண்டார். எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், அண்ணன் இதுவரை பிரபாகரனைச் சந்தித்தேன் என பீற்றிக்கொண்டதில்லை. சந்தித்தேன் என யாரிடமும் அலட்டிக்கொண்ட தில்லை. அவருடைய ஓவியத்தில் இருக்கும் முதிர்ச்சியைப் போலவே, அவரது அணுகு முறையிலும் முதிர்ச்சியிருக்கும். பெரியாரை கருத்தியல் அடிப்படையில் விமர்சிக்கலாம். பதில் தரலாம். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அவதூறு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? நெஞ்சு பதறுகிறது. பெரியார் எத்தகைய தியாகத்தைச் செய்தார்? ஈழ விடுதலை களத்திலிருக்கிற அத்தனை மனிதர்களும் மதிக்கிற ஒரு மாமனிதர் தந்தை பெரியார். பெரியார் அவர்களைப் பற்றி, திராவிட இயக்கங்களைப் பற்றி ஒரு சிறிய விமர்சனம்கூட வைத்ததாக எந்த சான்றும் இல்லை. திராவிட இயக்கங்களை அண்ணன் பிரபாகரன் அவர்களே விமர்சித்தார் என்பது போன்ற கருத்து இப்போது உருவாக்கப் படுகிறது. பெரியாரை விமர் சித்தார் என்று சொல்வதை சகிக்க முடியவில்லை. பெரியாரை பிரபாகரனுக்கு எதிராக நிறுத்துவது, பிரபாகரனை பெரியாருக்கு எதிராக நிறுத்துவது ஒரு ஆபத்தான போக்கு. இதை நாம் கண்டும்காணாமல் போய்விட முடியாது.

பெரியார் சனாதன எதிர்ப்பின் அடையாளம். அதை மையமாக வைத்துதான் தமிழை அவர் விமர்சிக்கிறார். தமிழில் புராணக் குப்பைகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற எரிச்சலில் பேசுகிறார். புதிய புதிய கருத்துகளை இடம்பெற வைக்காமல், மூடக்கருத்துகளை மட்டுமே பேசுகிற மொழியாக இருக்கிறது என்ற எரிச்சலில், அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி எனப் பேசுகிறார். ஏதோ, அவருக்கு கன்னட மொழி மீதிருந்த பற்றில் தமிழை விமர்சிப்பதுபோன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. அந்தப் பெரியார்தான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அந்தப் பெரியார்தான் தமிழ்நாடு வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். சனாதன எதிர்ப்பு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. தமிழ்நாடு குறிவைக்கப்படுகிறது. சனாதன எதிர்ப்புக்குக் காரணம் பெரியா ரியம் என உணர்ந்து பெரியாரியத்தை வீழ்த்த, அரசியல் சதி இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது' என நறுக்குத் தெறித்தாற்போல பேசியது கருத்தரங்கத்தில் பலரையும் கரவொலி எழுப்ப வைத்தது. மேலும் தமிழ்நாட்டின் ஆயிரம் ஓவியர்களை வரவழைத்து ஆயிரம் பெரியார்களை வரைய வேண்டுமென ஓவியர் மருதுவிடம் கோரிக்கை வைத்தார்’ ''

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் ரீதியாக தாக்கப்பட்ட வழக்கை, உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கையாண்டு வருகிறது. இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை வெளியே கசிந்தது தொடர்பாக இந்தக் குழு, குமுதம், தந்தி, புதிய தலைமுறை, ஜெயா டிவி, நமது அம்மா உள்ளிட்ட 14 பத்திரிகை மற்றும் ஊடகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து விசாரித்திருக்கிறது. அவர்களில் சிலரது செல்போனையும் வாங்கி வைத்திருக்கிறார்கள். அந்தக் குற்றப்பத்திரிகை கசிந்ததற்கு தொழில் நுட்பக் கோளாறே காரணம் என்று, ஏற்கனவே காவல்துறை தெரிவித்திருக்கும் நிலையில், இதற்காக ஊடகத்தினரை விசாரிப்பது, ஊடக சுதந்திரத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் முரணானது என்கிறார்கள் ஊடகத் தரப்பினர்.''’